சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் புகைப்படங்கள் பகிர்வது, கருத்துக்கள் பதிவிடுவது, ரசிகர்களுடன் சாட் செய்வது என அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
ஆனால் அதில் சிலர் நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டு முகம் சுளிப்பை ஏற்படுத்த அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் புகைப்படத்தை பதிவிட்டு சரியான பதிலடி கொடுப்பதுண்டு.
இதுபோல மலையாளா நடிகை அபர்ணா நாயருக்கும் நடைபெற்றுள்ளது. மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா, ரன் பேபி ரன், கல்கி என பல படங்களில் நடித்துவர் அபர்ணா. தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் அவர் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை ரசிகர் ஒருவர் ஆபாசமாக வர்ணித்திருந்தார். இதனால் கோபமான அபர்ணா அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருவருக்கத்தக்க நடத்தை.
இது போல மோசமான கருத்துக்களை பதிவிட்டு உங்களின் பாலியல் கற்பனை இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்கான தளமல்ல. நான் தங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றோ, உங்கள் கருத்துக்களை கண்டுகொள்ளா மாட்டேன் என்றோ நினைத்தால் அது தவறு.
உங்களுக்கு மகள் இருக்கிறாள். அதை மனதில் கொண்டு கருத்துக்களை வெளியிடுங்கள். உங்களுக்கு 30 நொடி சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நானில்லை என கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.