மலையாள சினிமாவில் அறிமுகமாகிய பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்க்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தன. இந்த நிலையில் இவர்களுக்கான திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.
அபர்ணா தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram

