தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பை நிறுத்திவிட்டு ஒதுங்கி இருந்த அனுஷ்கா தற்போது மீண்டும் தனது திரைப்பயணத்தை புது திரைப்படத்துடன் தொடங்கியுள்ளார்.
அதன்படி அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்றைய தினம் அதிகாரவபூர்வமாக வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பி. மகேஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு “மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
#MissShettyMrPolishetty First Look❤️
Stars : Anushka – NaveenPolishety
Music : Radhan (SNSM)
Direction : Mahesh Babu P (Debut)Thalaivi is Back????????????
Shoot Completed & Releasing Soon. pic.twitter.com/1CkgAFgMrl— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 1, 2023

