Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலிவுட் படங்கள் தோல்வியடைய காரணம் இதுதான்..? அட்லியை மறைமுகமாக விமர்சித்து பேசிய பிரபலம்

anurag-kashyap-about-bollywood-failure

தெலுங்கு சினிமாவில் உள்ள பல இயக்குனர்கள் தற்போது பாலிவுட் சினிமாவின் படங்களை இயக்குவதை டிரெண்டாக்கி வருகின்றனர். ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரை உலகின் இயக்குனராக அறிமுகமான அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படியான நிலையில் பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்தி படங்கள் தோல்வி குறித்து பேசி உள்ளார். இந்தி தெரியாதவர்கள் எல்லாம் ஹிந்தி படத்தை இயக்க வந்து விடுகிறார்கள் அதுதான் பாலிவுட் படங்கள் தோல்வி அடைய காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் அப்படி இல்லை அவர்களது கலாச்சாரத்தோடு இணைந்து படங்களை இயக்குகிறார்கள் அதனால் வெற்றி பெறுகிறது என கூறியுள்ளார். அனுராதா காஷ்யப் பேசியது அட்லியை தான் இவர் மறைமுகமாக திட்டுகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

இவர் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தை இந்தியில் ரீமேக்ஸ் செய்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

anurag-kashyap-about-bollywood-failure
anurag-kashyap-about-bollywood-failure