எனக்கு அது இரண்டும் அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள் – அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

அவர் அளித்த பேட்டி வருமாறு: “நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அவர்கள் வலிமையான மனதோடு இருக்க வேண்டும். படங்கள் தோல்வியானால் என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்பவர்களிடம் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பேன் என்று பதில் சொல்லி வருகிறேன்.

சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டிகள் கொடுத்து சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு ஆளானேன்.

ரொம்ப அகங்காரம் பிடித்தவள் என்றும் பேசினர். இது வருத்தமாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். எனது கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

எனது தலைமுடி அடர்த்தியாக இருக்கும். தினமும் தேங்காய் எண்ணை தேய்க்கிறேன். நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகள் நடிப்பு பிடித்து இருந்தால் போன் செய்து பாராட்டுவேன். 3 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எதிர்காலத்தில் டைரக்டராவேன்.” இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

28 minutes ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

36 minutes ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

49 minutes ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

53 minutes ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

58 minutes ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

1 hour ago