Another crown for Ilayaraja.. The musician who is the recipient of the Padmapani Award..!
இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு மகுடம்.. பத்மபாணி விருதுக்கு சொந்தக்காரராகும் இசைஞானி..!
இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
8 நாட்கள் நடைபெறும் இப்பட விழாவில் சுமார் 70 திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது வழங்கப்பட இருக்கிறது. இதை விழா ஏற்பாட்டாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்னிலையில், ஜனவரி 28-ந்தேதி அன்று மாலையில் நடைபெறும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இவ்விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட இருக்கிறது.
திரைப்பட விமர்சகர் லத்திகா பட்கோங்கர் (தலைவர்), திரைப்பட இயக்குநர்களான அசுதோஷ் கோவாரிக்கர், சுனில் சுக்தங்கர், சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் அடங்கிய குழுவினர் இளையராஜாவை, இந்த விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவ்வகையில் அவருக்கு, பத்மபாணி நினைவுச் சின்னம், பாராட்டுப் பத்திரம், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்னர் இந்த விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர் - எழுத்தாளர் சாய் பரஞ்ச்பே, நடிகர் ஓம் பூரி ஆகியோர் பெற்றுள்ளனர். விருதுகள் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கம்தானே.!
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…