தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு நடந்து முடிந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. அண்ணாத்த திரைப் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் அதற்கு தற்போது துளியும் சாத்தியமில்லை என்பதால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாத படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் தான் படமாக்கப்பட உள்ளது.
இதனால் இப்படம் பொங்கலுக்கும் வெளியாகாது என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை படக்குழு தமிழ் புத்தாண்டன்று வெளியிட முடிவு செய்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் தீபாவளி அல்லது பொங்கல் ரிலீசாக அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…