2021ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக தமிழில் ரஜினியின் அண்ணாத்த, விஷால்-ஆர்யா நடித்த எனிமி படங்கள் வெளியாகி இருந்தன.
இரண்டு படங்களுமே பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது, கலெக்ஷனும் அமோகமாக வருகிறது.
ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு வசூலித்திருந்தது, நேற்றைய வசூல் சேர்த்து அண்ணாத்த வசூலில் மாஸ் காட்டிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விஷாலின் எனிமி படமும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.
2வது நாளில் ரஜினியின் அண்ணாத்த தமிழ்நாட்டில் ரூ. 20 கோடியும், எனிமி திரைப்படம் ரூ. 3 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

