தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் அனிதா சம்பத். மேலும் இவர் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார்.
நிலையில் தற்போது அனிதா சம்பத் ஓட்டு வீட்டில் பிறந்து இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் புதிதாக வீடு வாங்கி தன்னுடைய பெற்றோர் மற்றும் கணவர் பிரபாவின் பெற்றோருடைய கனவை நிறைவேற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர்கள் லைக் அள்ளி குவித்து வருகின்றனர். புதிய வீடு வாங்கி குடியேறியுள்ள அனிதா சம்பத்துக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram