தமிழ் சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கும் ஒருவர்தான் அனிதா சம்பத். சந்தொலை காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் அப்போதே பல ரசிகர்களின் மனதில் அழகு தேவதையாக கவர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தமிழ்நாட்டின் மூளை முடுக்கு அனைத்து இடத்திலும் பிரபலமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து youtube சேனலில் அனிதா சம்பத் உலோகஸ் என்ற சேனலில் அவர் கணவரோட எடுத்துக் கொள்ளும் வீடியோக்களையும், பெண்களுக்கான அழகு குறிப்புகளையும் அவ்வப்போது வீடியோவாக பதிவிட்டு வருவார் இதனால் இவரை பல ரசிகர்கள் youtube இல் ஃபாலோ செய்து வருகின்றனர்.
தற்போது ‘தெய்வ மச்சான்’என்ற படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவ்வப்போது பல நடிகைகளை போல் ஃபோட்டோ ஷூட் செய்து அதனை தனது இணையதளத்தின் மூலம் ஷேர் செய்து வருவார். அதேபோல் சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து போட்டோஸ் எடுத்துள்ளார். மேலும் அந்த போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம அனிதா சம்பதா இது? என்ற கேள்வியோடு ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.
View this post on Instagram

