தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து அதன்மூலம் தனியிடம் பதித்தார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவர் திருமணத்திற்குப் பிறகு ஓய்வில் இருந்து தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள ஜோஸ்வா இமை போல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி படு பிசியாக இருந்து வரும் சிலர் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ரூபாய் 3 முதல் 4 லட்சம் வரை சம்பளமாக வாங்குவதாக தெரியவந்துள்ளது.
இதைக் கேட்ட நெட்டிசன்கள் பலரும் விட்டா ஹீரோயின்களையே ஓவர்டேக் பண்ணி விடுவார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
