Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

ananya-eliminated-from-bigg-boss-7

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் சிறிய பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

பெரிய பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான உணவை இவர்கள்தான் சமைத்து தர வேண்டும் என்பது விதிமுறை. இந்த முறை அனன்யா ஜோவிகா பாவா செல்லதுரை வினுஷா தேவி, உள்ளிட்டோர் இரண்டாவது பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

பிறகு யுகேந்திரன் மற்றும் விசித்ரா ஆகியோர் விதிமுறையை மீறியதாக இரண்டாவது பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான குறைந்த ஓட்டுக்களை பெற்றது யுகேந்திரன் தான் என சொல்லப்படுகிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் பாவா செல்லதுரை மற்றும் அனன்யா ஆகியோர் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளனர். விதிமுறைப்படி யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டிய நிலையில் அவரையும் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த பாவா செல்லதுரை என இருவரையும் சேவ் செய்து அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த அனன்யாவை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ananya-eliminated-from-bigg-boss-7
ananya-eliminated-from-bigg-boss-7