கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள் இதுதான்.
பொதுவாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகம் சேருவது வழக்கம். ஆனால் கொழுப்பு நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நாம் இப்போது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து பார்க்கலாம்.
நம் உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகித்தாலும் ஆனால் இதயத்திற்கு கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருப்பது நல்லது.
முதலில் புகைப்பிடித்தலை தவிர்ப்பது சிறந்தது ஏனெனில் புகை பிடிப்பதன் மூலம் நம் உடலில் ரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து விடும். அதுமட்டுமில்லாமல் தமனிகளில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் வர வழிவகுக்கும்.
எனவே இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க வேண்டுமென்றால் புகைபிடிப்பதை நிறுத்துவது சிறந்ததாகும்.
மேலும் நாம் உண்ணும் உணவுகளில் அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவதை பெரும்பாலும் தவிர்த்தால் நம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கலாம். கொலஸ்ட்ராளை தவிர்க்க முக்கியமாக நம் உடல் பருமனை குறைப்பது சிறந்தது.
உடல் எடையை குறைத்து கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்த நார்ச்சத்துள்ள உணவுகளான முளைகட்டிய பயிறு வகைகள் ஆப்பிள் ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து உணவுகளை உண்ணுவதால் நம் உடலில் ஆரோக்கியமாகவும் கொலஸ்ட்ராலை குறைத்தையும் வாழலாம்

