தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன்பின் தங்க மகன், 2.0, ஐ, கெத்து போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
எமி ஜாக்சன் அவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்பு ஹிந்தி நடிகரான பிரதீக் பப்பரை காதலித்து சில மாதங்களில் பிரிந்து விட்டனர். அவரை தொடர்ந்து ஐரோப்பியாவின் பிரபல குத்துச்சண்டை வீரரான செல் கிரீக் என்பவரையும் காதலித்து பிரிந்து உள்ளார்.
பின்பு லண்டன் ஹோட்டல் அதிபரான ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார் எமி ஜாக்சன். தற்போது கருத்து வேறுபாட்டின் காரணத்தால் ஜார்ஜ் விட்டு பிரிந்து உள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளார்.
