Amitabh's heartbreaking tweet
இந்தி சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றதையொட்டி, அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் வாழ்த்து புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், அந்த புகைப்படத்தின் பின்னணியை விளக்கியுள்ளார்.
அமிதாப் கூறியிருப்பதாவது, ‘கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியபோது, என்னை பார்க்க வந்த தந்தை உடைந்து, கண்ணீர்விட்டு அழுதார். அப்போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இது. தந்தையிடம் இருக்கும் சிறுவன் அபிஷேக் பச்சன். இதுவரை கூலி திரைப்படம் பார்க்கவில்லை. இந்த வலியுடன் இனியும் அந்த படத்தை பார்க்கமாட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1982ம் ஆண்டு கூலி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அமிதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த ஆபரேஷன் செய்யும்போது அமிதாப்புக்கு வேறொருவரின் ரத்தம் கொடுக்கப்பட்டது.
அந்த நபருக்கு இருந்த ஹெபடைடீஸ் பி என்ற கல்லீரல் நோய், அமிதாப்புக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் இன்றும் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வளவு சோகம் நிறைந்த நினைவலைகளைக் கொண்டுள்ளார். அமிதாப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் ரசிகர்கள், அவரின் நினைவுகளைக் கேட்டு தங்களின் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே…
தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…