Amitabh Bachchan amazes the clap movie crew
நடிகர் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் ஆதிக்கு ஜோடியாக, ஆகான்ஷா சிங் நடித்துள்ளார். மேலும் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. 70 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது.
ஆனால் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியதோடு, பெரும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேலும் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பையும் அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…