Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் வெள்ளித்திரையில் entry கொடுக்க இருக்கும் அமீர் பாவனி.. வைரலாகும் தகவல்

amir-pavni-joined-in-new-movie update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்ற அமீர் பாவனியை காதலிக்க தொடங்கினார்.

பிறகு இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடு டைட்டிலை வென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாவனி முதல் முறையாக வெளிப்படையாக அமீரை காதலிப்பதாக கூறினார்.

விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என தெரியவந்துள்ளது. விரைவில் படம் பற்றிய தகவல்கள் அறிவிப்பாக வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

 amir-pavni-joined-in-new-movie update
amir-pavni-joined-in-new-movie update