சுண்டைக்காயில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
வீட்டிலேயே வளர்க்கும் செடிகளில் ஒன்று சுண்டைக்காய். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
ஹீமோகுளோபின் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி அஜீரணம் செரிமான பிரச்சனை போன்றவற்றை தீர்க்க சுண்டைக்காய் பயன்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இது உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி இதய நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கிறது.
பெண்களுக்கு பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது வழக்கம். அப்படி ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சுண்டைக்காய் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக தலைசுற்றல் சோர்வு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.