amaran-movie-second-look-release update
“நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.நேற்று (பிப் 16) அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
இந்த திரைப்படத்தில் \”முகுந்தன்\” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…