Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா?வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தனது கர்ப்பத்தை அறிவிக்க கர்ப்பமான பின்னரே இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்பது உறுதியாகியது.

இதையடுத்து தொடர்ந்து தனது கர்ப்பம் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த அமலா பால் தற்போது கையில் குழந்தையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 11-ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அமலாபாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)