Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த ஆலியா மானசா.. குவியும் வாழ்த்து

Alya Manasa Blessed with Boy Baby

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதன் காரணமாக இவர் ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிக்கொண்டார்.

இந்த மாதம் இறுதியில் அவருக்கு பிரசவ தேதி அளித்திருப்பதாக சஞ்சீவி தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலியா மானசா குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Alya Manasa Blessed with Boy Baby
Alya Manasa Blessed with Boy Baby