சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளுக்கு மக்கள் மிகுந்த ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ரீல் ஜோடியாக இருந்து பின் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடியானவர்கள் வெகு சிலரே.
இதில் ஒரு ஜோடி ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா மானசா சஞ்சீவ். கடந்த வருடம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.
பின் ஆல்யா கர்ப்பமானார். வளைகாப்பும் நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
முதன் முறையாக அவர்கள் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். குழந்தை பார்த்த ரசிகர்கள் அது ஆல்யா போலவே இருக்கிறது என கூறியுள்ளனர்.
இந்த புகைப்படத்தை 1.38 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

