தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது அவருடைய அடுத்த அரசியல் வாரிசு அஜித் தான் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரேமம் பாட இயக்குனர் அல்போன்ஸ் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் அரசியலுக்கு வருவதாக சுரேஷ் சந்திரா மற்றும் நிவின் பாலி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
பிரேமம் படத்தில் நிவின் பாலி நடிப்பை பார்த்துவிட்டு அவரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய போது இவ்வாறு கூறியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை உங்களை அரசியல் களத்தில் பார்த்ததில்லை.
அப்படி இருக்கையில் அவர்கள் பொய் சொன்னார்களா அல்லது சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது உங்களுக்கு எதிராக யாரோ இருக்கிறார்களா? அப்படி இது எதுவும் இல்லை என்றால் நீங்கள் எனக்கு பொதுவெளியில் ஒரு லெட்டர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் என்னது அஜித் அரசியலுக்கு வராரா இது என்ன புது புரளியா இருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram