பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.
பெரும்பாலும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் பிரச்சனை. அதில் பொடுகு அதிகமாக இருப்பது மற்றும் முடி உதிர்வது என பல பிரச்சனைகள் வரக்கூடும்.
அதற்கு இயற்கையாகவே மருந்தை நாம் தயாரிக்கலாம்.
கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது மற்றும் உடைவதை தடுத்து முடிக்கு ஊட்டம் அளிக்கிறது. வாரத்தில் மூன்று நாள் இதை பயன்படுத்துவது சிறந்தது.
கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடியை பலப்படுத்துவது மட்டுமில்லாமல் மெல்லியதாகவும் உயிரற்றதாகவும் இருக்கும் முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுகிறது.
குளிர்காலத்தில் பயன்படுத்தினால் பொடுகு தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.
மேலும் கற்றாழையை கண்டிஷனராகவும் பயன்படுத்தினால் கூந்தலில் ஈரப்பதத்தை காக்கும்.