சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன் என்று பார்க்கலாம்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் உலர் பழங்களை சேர்த்துக் கொள்வது சிறந்தது. அதிலும் குறிப்பாக பாதாம் மிகவும் நன்மையை நமக்கு தருகிறது.
இது உடலில் போதுமான அளவு கால்சியத்தை கொடுப்பதனால் கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எடையை குறைக்க விரும்பினால் பாதாமை ஊற வைத்து காலையில் சாப்பிடும் போது உடல் எடை குறைவதை உணரலாம்.
மேலும் பாதாம் புற்றுநோயிலிருந்தும் உங்களை காக்க மிகவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளியாக இருப்பவர்கள் பாதாமை தினமும் உணவின் சேர்த்துக் கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது.
பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைக்கும் போது பாதாம் பல மடங்கு நன்மையை நமக்கு அளிக்கிறது. நாம் பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் பைட்டிக் அமிலம் நீங்கி ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும்.