Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தையுடன் வீடு திரும்பிய ஆலியா பட்..வைரலாகும் புகைப்படம்

alia-bhatt-going-home-with-baby-photos

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த ஐந்து வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த ஆலியாவிற்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் மதியம் 12.5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் ஆலியா மற்றும் ரன்பீர் கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மகளை இந்த தம்பதியினர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்பா ரன்பீர் கபூர் தனது கைகளில் பிறந்த குழந்தையைப் பிடித்தபடி காணப்பட்டார். மேலும் அவரது பக்கத்தில் நடிகை ஆலியா கருப்பு நிற ஆடையில் அமர்ந்திருந்தார். இவர்களது இந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

alia-bhatt-going-home-with-baby-photos
alia-bhatt-going-home-with-baby-photos