Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிஸ்தா படத்திலிருந்து வெளியான அழகுல ராசாத்தி பாடல்..வைரலாகும் வீடியோ

alagula-rasathi-video-song-from-pistha movie

தமிழ் சினிமாவில் வெளியான மெட்ரோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் பிஸ்தா. இந்த படத்தில் மிர்துளா முரளி நாயகியாக நடிக்க அருந்ததி நாயர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

எம் ரமேஷ் பாரதி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார். எம் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் தரண் குமார் படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் ஜே விஜய் பாடல் வரிகளையும் எழுதி உள்ளார். இந்த படத்தில் இருந்து பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுவரை படத்தின் லிரிக்ஸ் வீடியோ பாடல் வெளியான நிலையில் தற்போது அழகுல ராசாத்தி பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது. மனதை கொள்ளை அடிக்கும் வகையில் வெளியாகி உள்ள இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.