வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்!

நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலை, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பைக் ரைடிங் உலக சுற்றுப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்தியாவில் அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

3 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

3 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

4 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago