ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் தல அஜித்தின் அடுத்த படமான “ஏ கே 62” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, துணிவு படத்தை தொடர்ந்து தல அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் Ak62 என்னும் தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகி உறுதியானதை தொடர்ந்து தற்போது இப்படத்தில் வில்லன் மற்றும் காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றின தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானமும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடிக்க இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவல் உறுதியானால் 29 வருடங்கள் கழித்து அஜித் மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தரமான அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
#CinemaUpdate | வில்லனுக்கே வில்லனாகிறார் அரவிந்த் சாமி? #SunNews | #AK62 | #AjithKumar | @VigneshShivN | @thearvindswami | @iamsanthanam pic.twitter.com/BrY921yZo8
— Sun News (@sunnewstamil) January 6, 2023