தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை திரைப்படம் வெளியானது.
இதையடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது. இதற்கான காரணங்களில் ஒன்றாக அஜித்தின் பைக் ரைட் சுற்றுலாவும் இருந்து வந்தது.
இதையடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் மீண்டும் பைக்கில் உலக சுற்றுலா கிளம்பி விட்டார். இது குறித்த புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டு இருந்தார்.
இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அஜித் இப்படியே உலக சுற்றுலாவுக்கு சென்று கொண்டிருந்தால் விடாமுயற்சி தொடங்குவது எப்போது என கவலை அடைந்துள்ளனர்.
