குட் பேட் அக்லி படம் வெற்றி அடைந்ததால் மீண்டும் அதே கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டும் இல்லாமல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இது ஒரு சிறந்த ஃபேன் பாய் சம்பவமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக தகவல் உறுதியாகி உள்ளதாகவும்,இந்த மாதம் இறுதிக்குள் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ajithkumar upcoming movie director update