Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தல” வேண்டாம்… மனைவியே என் பலம்! – அஜித் நெகிழ்ச்சி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் ஒரு ஹிந்தி தொலைக்காட்சிக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பத்ம பூஷன் விருதுக்காக டெல்லி சென்றிருந்த அவர், அந்த சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். எப்போதும் போல, தன்னை சூப்பர் ஸ்டார் என்றோ அல்லது ரசிகர்கள் அன்போடு அழைக்கும் “தல” என்றோ குறிப்பிட வேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த பேட்டியின் முக்கிய அம்சமாக அமைந்தது, தனது மனைவி ஷாலினி குறித்து அவர் உருக்கமாகப் பேசியதுதான். ஷாலினி தனக்காக பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும், அவரே தனது வலிமையின் தூண் என்றும் அஜித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“நான் எப்போதும் சரியான முடிவுகளை எடுத்ததில்லை. பல சமயங்களில் தவறான பாதையில் சென்றிருக்கிறேன். ஆனால், ஷாலினி கடினமான காலங்களில் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னை ஒருபோதும் ஊக்கமிழக்கச் செய்யாமல், என் கூடவே நின்றார். நான் இன்று அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளுக்கும் முழு காரணம் அவர்தான். அந்த கிரெடிட்டை நான் அவளுக்கே கொடுக்கிறேன்,” என்று அஜித் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.

அஜித்தின் இந்த பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், தனது மனைவியின் தியாகத்தையும் ஆதரவையும் வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பண்பு பலரையும் கவர்ந்துள்ளது. ஷாலினி மீதான அவரது அன்பும் மரியாதையும் இந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது. அஜித் – ஷாலினி ஜோடி திரையுலகில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்பதை இந்த பேட்டி மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அஜித் தனது அடுத்தடுத்த படங்களில் மேலும் பல சாதனைகளை படைக்க அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ajithkumar talk about shalini ajithkumar