Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை விட அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய். வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து வெளியான தகவல்

ajith vs vijay salary for upcoming movies updates

தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். ரஜினி கமலுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களாக இருவரும் கோலோச்சி வருகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன.

இரண்டு பட குழுவினரும் மாறி மாறி படத்திற்கு பிரமோஷன் செய்து வரும் நிலையில் அஜித் விஜய் ஆகியோர் இந்த படங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் வாரிசு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 120 கோடி சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதேபோல் தல அஜித் துணிவு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 70 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அஜித்தை விட தளபதி விஜய் 50 கோடி ரூபாய் சம்பளம் அதிகமாக வாங்கி உள்ள என ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.

ajith vs vijay salary for upcoming movies updates
ajith vs vijay salary for upcoming movies updates