ரீ-ரிலீஸில் மோதும் அஜித் – விஜய் படங்கள்.. ரசிகர்களே எதிர்பாரா அறிவிப்பு
பொங்கல் பண்டிகையில் விஜய்-அஜித் படங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக இதோ ரசிகர்களுக்காக உற்சாக நிகழ்வு..
விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’.
அட்லி இயக்கி வெற்றி பெற்ற இப்படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.
‘ஜனநாயகன்’ வெளியாகாத நிலையில், பொங்கலை முன்னிட்டு இந்தப் படத்தை ஜனவரி 15-ந்தேதி மறு வெளியீடு செய்வதாக அறிவித்திருந்தார் கலைப்புலி எஸ்.தாணு.
சில காரணங்களால் அன்று வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் 23-ந்தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார் தாணு.
அதேபோல, அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் நடித்து 2011-ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 23-ந்தேதி ரீரிலீஸாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரீ ரிலீஸில் விஜய், அஜித் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc