“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

“யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை” – விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை.

வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்’ என்​றார்.

இந்​தப் பேட்டி சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இவரது கருத்துக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் எதி​ரான கருத்​துக்​களை தெரி​வித்​தனர்.

இதற்கு சமூக ஊடகத்​தில் வெளியிட்ட வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: ‘இசை எப்​போதும் இந்​திய பண்பாட்​டுடன் இணைவதற்​கும், அதை கொண்​டாடு​வதற்​கும், மதிப்​ப​தற்​கு​மான ஒரு வழி​யாகவே எனக்கு இருந்து வரு​கிறது. இந்தி​யா ​தான் எனது ஊக்​கம், என் ஆசான், என் வீடு. சில நேரங்களில் நோக்​கங்​கள் தவறாகப் புரிந்​து​கொள்​ளப்​படுகின்றன. ஆனால், இசை​யின் மூலம் முன்​னேறு​வது, மரியாதை செலுத்​து​வதும் சேவை செய்வதுமே எப்​போதும் என் நோக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

யாரை​யும் புண்​படுத்த வேண்​டும் என நான் ஒரு​போதும் நினைத்ததில்​லை. என் நேர்​மையை மக்​கள் புரிந்துகொள்​வார்​கள் என்று நம்​பு​கிறேன்.

நான் இந்​தி​ய​னாக இருப்​ப​தில் பெரு​மிதம் கொள்​கிறேன். இதுதான் கருத்து சுதந்திரத்தை அனு​மதிக்​கிறது. பல்​வேறு பண்​பாடு​களின் குரல்களை கொண்​டாட வைக்​கிறது. ஜெய் ஹிந்த், ஜெய் ஹோ என ஏ.ஆர்.ரகுமான்​ கூறியுள்ளார்.

தற்போது பாலிவுட்டில் ரன்வீர்சிங், சாய்பல்லவி ராமர்-சீதையா நடிக்கும் புராண காவியம் ‘இராமாயணா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“I never wanted to offend anyone” – A.R. Rahman responds to criticism
dinesh kumar

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

21 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

21 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

21 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

1 day ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

1 day ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

1 day ago