Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை அப்டேட் குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல், என்ன தெரியுமா?

ajith valimai release date update

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இருந்து இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கள் வெளியாகி இருக்கிறது.

அதனையடுத்து வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை, ரசிகர்கள் அனைவரும் இதன் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை திரைப்படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

அதன்படி வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்றும் அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.