Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லடாக்கில் அஜித் என்ன செய்துள்ளார் பாருங்க.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள் இதோ

ajith-pays-tribute-at-kargil-war-memorial

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் அஜித் குமார் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனக்கான படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ajith-pays-tribute-at-kargil-war-memorial
ajith-pays-tribute-at-kargil-war-memorial

இந்தப் பயணத்தில் நடிகர் அஜீத் குமார் தனது நண்பர்களுடன் இணைந்து Ak61 திரைப்படத்தின் கதாநாயகியும் பிரபல நடிகையுமான மஞ்சு வாரியரையும் அழைத்து சென்று இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ajith-pays-tribute-at-kargil-war-memorial
ajith-pays-tribute-at-kargil-war-memorial