கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில் சத்யஜோதி தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார்.
முன்னதாக இவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவி குறித்து டி.ஜி.தியாகராஜன் கூறியபோது, இந்த பதவி கிடைத்தது எனக்கு எதிர்பாராத ஒன்றாகவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கிறது.
சவாலான பொறுப்பை சரியாக செய்து முடிப்பேன். என்னைத் தேர்வு செய்து இந்த பதவியை அளித்த இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…