Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்.படக்குழு எடுத்த முடிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது‌. துணிவு ப‌டத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகி அதன் பிறகு மகிழ் திருமேனி படத்தை இயக்க கமிட்டாகினார்.

படத்தின் படப்பிடிப்புகள் அர்பன்ஜைனாவில் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மொத்த படக்குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

தற்போது அர்பன்ஜைனாவில் வானிலை மிகவும் மோசமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது‌. தொடர்ந்து அங்கிருந்தால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் உருவாகும் என்பதால் படக்குழு சென்னையில் செட் போட்டு மீதி படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

Ajith Kumar upcoming movie latest update
Ajith Kumar upcoming movie latest update