ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குழு ரேசில் வெற்றி அடைந்ததை சிறப்பாக கொண்டாடி இருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில்,”அஜித் வாழ்க..விஜய் வாழ்க” நீங்க எப்போ வாழ போறீங்க.. நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் வாழ்க்கையில் சிறப்பாக சாதிக்கிறார்கள் என அறிந்தாலும் நானும் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்.ஆனால் தயவு செய்து உங்கள் வாழ்க்கையை பாருங்க என்று சொல்லி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
