கோலிவுட் திரை உலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன்படி நடிகர் அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் மகிழ்திருமேனி இயக்கம் இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானதிலிருந்து அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து வரும் நடிகர் அஜித் ரெட் கலர் டி-ஷூட்டில் ஸ்விட்சர்லாந்து ஏர்போர்ட்டில் ரசிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
AK #AjithKumar Sir Recent ???? Photo From Switzerland Airport
Looking Fit And Vera Maari Smart ????????#VidaaMuyarchi pic.twitter.com/h4P77bOdgf
— KERALA AJITH FANS CLUB (@KeralaAjithFc) July 9, 2023

