தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு
இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Discipline makes life easier#AKMOTORIDE pic.twitter.com/wf5kZHMVdt
— Suresh Chandra (@SureshChandraa) May 22, 2023