Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துபாயில் குடும்பத்துடன் அஜித்.!! வீடியோ வைரல்

ajith-kumar-latest-holiday-vaccination-video-viral update

கோலிவுட் திரையுலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட்ன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் துபாயில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருக்கும் நடிகர் அஜித்குமாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.