கோலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்ப படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அஜித்தின் அதுக்கு அடுத்த படமான ஏகே 63 படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 63 திரைப்படத்தை ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய் திரைப்படங்களை மூன்று முறை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் அட்லீ இயக்க இருப்பதாகவும் இப்படத்தை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
#AK63 exclusive ????#AjithKumar – #Atlee – #ARRahman – #Lyca ????
The combo is confirmed ✅
Going to be the biggest movie in #AK's career ????— AmuthaBharathi (@CinemaWithAB) January 27, 2023