தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி பைக் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பைக் பிரியராக இருக்கும் அஜித் உலக சுற்றுப்பயணம் சென்றார். சமீபத்தில் இவர் ஓமன் நாட்டில் பைக்கில் செல்லும் வீடியோ வைரலானது.
இந்நிலையில், நடிகர் அஜித், ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவரும் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் அவர் சென்னை திரும்பியுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் அஜித், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exclusive ????
THALA Ajith Sir Latest Video at Chennai Airport????#VidaaMuyarchi pic.twitter.com/GN8AdLXbrM
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 21, 2023