Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிளாக்பஸ்டர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்..வைரலாகும் தகவல்

ajith-joins-with-aadhik-ravichandran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‌அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் நடந்த தாக்குதல் காரணமாக அதன் தாக்கம் துபாயிலும் இருப்பதால் படப்பிடிப்புகள் தடைப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக அஜித் ரூபாய் 170 கோடி வரை சம்பளம் வாங்க இருந்ததாகவும் தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகின்றது.

ajith-joins-with-aadhik-ravichandran
ajith-joins-with-aadhik-ravichandran