Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

Ajith In Valimai Poster With New Releases Date

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்தது.

ஆனால் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து இந்த படம் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் ரசிகர்களும் இந்த தகவலை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.