தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவு மிகப் பிரம்மாண்டமாக அஜித்தின் வலிமை திரைப்படம் விற்பனையாகி ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் போனிகபூர் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தில்தான் நடிக்க வந்தார். இந்த நிலையில் காதில் கடுக்கன் முகமெல்லாம் தாடி என முற்றிலும் வித்தியாசமான விதத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இது அடுத்த படத்தின் லுக்காக இருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
