தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகி வரும் அஜித் தற்போது கேரளாவில் பிரபல கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு இவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
• A Day Starts With #AK's Latest Pic..! #Ak61 #AK62 | #Valimai | #AjithKumar pic.twitter.com/VJ5q71PVEx
— AJITH FANS UNIVERSE ???? (@AjithFansUniv) March 31, 2022

