Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் குறித்து சுவாரசிய தகவலை வீடியோ மூலம் வெளியிட்ட ஷாலினி

ajith-favourite-song-while-travelling

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி குடும்பம் குழந்தை என செட்டிலாகி விட்ட நிலையில் அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் தற்போது பைக்கில் உலக சுற்றுலா சென்று உள்ளார். இதன் நிலையின் நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் அஜித் பயணத்தின் போது அதிகம் கேட்கும் பாடல் எனக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான பவித்ரா படத்தில் இடம் பெற்ற உயிரும் நீ உடலும் நீ என்ற பாடல் தான் அது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.